டிரம்ப் ஏற்படுத்தியுள்ள முன்னேற்றம்

Photo of author

By Parthipan K

ஜனாதிபதி டிரம்ப் இந்திய அமெரிக்க உறவுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், இந்த உறவை இனி வரும் ஆண்டுகளிலும் மேம்படுத்துவார் என்றும் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இரு நாடுகளும் பரஸ்பர நலன் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. பிப்ரவரி 24 முதல் 26-ந்தேதிகளில் டிரம்ப் இந்திய பயணம் மேற்கொண்டார்.

அப்போது அவரும், பிரதமர் மோடியும் இருநாட்டு உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஜனாதிபதி டிரம்ப், இந்தியா- அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தியுள்ளார். ஒப்பந்தமில்லாத கூட்டாளி அந்தஸ்தை இந்தியாவுக்கு முதன்முதலாக அவர்தான் அளித்தார். அமெரிக்கா, இந்தியாவுக்கு 2-வது பெரிய ஆயுத வினியோகஸ்தராக மாறியுள்ளது என்று கூறினார்