சற்றுமுன் தொடங்கிய இங்கிலாந்து பாகிஸ்தான் போட்டி

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடைபெறவில்லை. தற்போதுதான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடந்தபடுகின்றன. அந்நாட்டில் பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதில் மான்செஸ்டரில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டி இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கி பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து 35 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.