பரபரப்பான சாலையில் பட்டபகலில் நடந்த பகீரங்க கொள்ளை !! ஓடும் காரை வழிமறித்து இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அட்டுழியம்!! 

பரபரப்பான சாலையில் பட்டபகலில் நடந்த பகீரங்க கொள்ளை !! ஓடும் காரை வழிமறித்து இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அட்டுழியம்!! 

பட்டபகலில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் சுரங்கச்சாலையில் ஓடும் காரை வழிமறித்து கொள்ளையடித்துச் சென்ற பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டெல்லியின் சரை ஹலி கான் பகுதி மற்றும் நொய்டாவை இணைக்கும் சாலையில் 1.5 கி.மீ தூரம் சுரங்கச்சாலை உள்ளது. இதில் எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.

இந்த சூழ்நிலையில் பிரஹதி மெய்டன் என்ற இந்த சுரங்கச்சாலையில் சென்ற 24ஆம் தேதி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த காரின் பின்னால் பின் தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் அந்த காரை வழிமறித்தனர்.

பின்னர் ஒரு பைக்கில் இருந்து இறங்கிய இருவர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காரில் உள்ளவர்களை மிரட்டி அவர்கள் வைத்து இருந்த 2 லட்ச ரூபாய் பணத்தை துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டுச் சென்றனர்.

பல வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் பரபரபரப்பான சுரங்கச்சாலையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.