காங்கிரஸ் பேனர் காற்றில் தூக்கி வீசப்பட்ட காட்சி!..காதில் போட்டுக்கொள்ளாத அதிகாரிகள்!!வாகன ஓட்டிகள் கடும் அவதி?
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500கிலோ மீட்டர் யாத்தியை நேற்று மாலை ஆரம்பித்தார்.இதற்கு முன் நேற்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னால் பிரதமரும் மற்றும் தன் தந்தையுமான ராஜீவ் நினைவகத்திற்கு வந்து தனது கடமைகளை செய்து மலர் தூவி மரியாதை செய்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சி தலைவரை வரவேற்க கட்சியினர் நேற்று சென்னை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள் வைத்தனர்.சாலையின் நெடுவே வரிசையாக அந்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.இதனால் சரியான பிடிமானம் இல்லாததால் சாலையில் ஆங்காங்கே சரிந்து விழுந்தது.
தொடர்ந்து வைக்கப்பட்டிருந்த பேனர்களால் தேசிய நெடுஞ்சாலை வழிய செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அவ்வழியே செல்லும் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.மேலும் இதை பற்றி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது,
கடந்த வருடம் 2019 ஆம் ஆண்டு சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ளிர பெண் பள்ளிக்கரணை அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்து தட்டுதருமாறி வாகனத்தை எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீதி மோதி சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.இதனை தொடர்ந்து பொது இடங்களிலோ அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.இந்நிலையில் சாலையோரம் 100 க்கும் மேற்பட்ட பேனர்களை கோர்ட்டின் அனுமதி இன்றி காங்கிரஸ் கட்சியினர் வைத்தனர்.
இவர்கள் எல்லாம் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்தன.எனவே இதுபோன்று பேனர்களை வைப்பவர் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் கூறியிருந்தார்.உயர் அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்தால் உயிரிழப்பை முற்றிலும் தடுத்து விடலாம்.