பாதுகாப்பு படையினர் தப்பி ஓட்டம்

Photo of author

By Parthipan K

மொசாம்பிக் என்ற நாடு ஆப்பிரிக்காவில் உள்ள நாடாகும் அந்த நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு நெருங்கிய தொடர்புடைய பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். வட பகுதியில் உள்ள நகரங்களை சில மாதங்களாகவே கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருகின்றனர். ஆயிர கணக்கான மக்கள் தங்கள் பகுதியை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். அந்த நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்று மொசிம்போ டா பிரையா துறைமுகம் ஆகும்.

அந்த துறைமுகத்தை குறிவைத்து பல முறை தாக்குதல்கள் நடத்தி வந்துள்ளனர். அங்கு இருந்த வீரர்களுடன் பல நாட்கள் சண்டை போட்டு அந்த பயங்கரவாதிகள் அந்த துறைமுகத்தை அவர்களுக்கு கீழ் கொண்டு வந்தனர். அங்கு இருந்த பாதுகாப்பு படையினர் தப்பி சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துறைமுகம் பயங்கரவாதிகள் பிடியில் வீழ்ந்திருப்பது, உள்நாட்டு பாதுகாப்பு படைகளுக்கு விழுந்துள்ள பலத்த அடியாக பார்க்கப்படுகிறது.