தீடிரென மாயமான அதிபரின் சகோதாரி?

கிம் யோ வடகொரிய ஆட்சி அதிகாரங்களில் முக்கிய பொறுப்புகளுக்கு கொண்டுவரப்பட்டார்.
சகோதரர் கிம் ஜாங் உடன் பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி தென்பட்டார். மட்டுமின்றி, தென் கொரியாவுக்கு எதிரான கடுமையான அறிக்கைகளையும் அவர் வெளியிட்டார்.இந்த நிலையிலேயே, கடந்த வாரம், தென் கொரியாவின் முக்கிய உளவுத்துறை நிபுணர் ஒருவர், கிம் ஜாங் தமது சகோதரியுடன் ஆட்சியை பகிர்ந்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியிட்டார்.

ஆனால் அந்த தகவல் வெளியான பின்னர் ஜூலை 27 முதல் கிம் யோ பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை எனவும்,பொதுவாக சகோதரர் கிம் ஜாங் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்வுகளில் தென்படும் கிம் யோ, புதனன்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில் இல்லை எனவும்,பொலிட்பீரோ உறுப்பினரான கிம் யோ, சமீபத்திய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.மேலும், கிம் யோ தமது தாய்மாமனுக்கு நேர்ந்தது தமக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என அஞ்சுவதாகவே கூறப்படுகிறது.

 

Leave a Comment