காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!!

Photo of author

By Sakthi

காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!!

Sakthi

காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!!

உத்திரபிரதேசத்தில் தன்னை காதலித்த காதலனுக்காக தன் சொந்த தங்கைகள் இரண்டு பேரை கொலை செய்த சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

உத்திரபிரதேச மாநிலம் பல்ராய்ப்பூரில் உள்ள பகதூர்கிராமத்தில் ஒரு வீட்டில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டு உடல்கள் சிதைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.

இது தொடர்பாக சிறுமிகளின் சகோதரியான அஞ்சலியை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அஞ்சலி தயங்கி தயங்கி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அஞ்சலியிடம் தீவிரமாக விசாரணை செய்தனர்.

அப்பொழுது அஞ்சலி இரண்டு தங்கைகளையும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அது மட்டுமில்லாமல் சிறுமிகளை அஞ்சலி கொலை செய்ததற்கான காரணத்தை கூறியது எல்லாரையும் விட மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளடக்கியது.

இந்த கொலை குறித்து அஞ்சலி கூறும் பொழுது “பெற்றவர்கள் வீட்டில் இல்லாத பொழுது காதலனுடன் நெருக்கமாக இருப்பதை என்னுடைய தங்கைகள் சுர்பி(7), ரோஷ்னி(4) இரண்டு பேரும் பராத்துவிட்டனர். இதை என்னுடயை பெற்றோர்களிடம் தங்கைகள் சொல்லிவிடுவார்கள் என்ற அச்சத்தில் இருவரையும் மண்வெட்டியை கொண்டு தாக்கி கொலை செய்தேன். பின்னர் இருவரையும் தனித்தனி அறையில் வைத்து பூட்டிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் கொலை செய்துவிட்டு நடனத்தை அழிக்கவும் அஞ்சலி முயன்றுள்ளார். சிறுமிகளை கொலை செய்யப் பயன்படுத்திய மண்வெட்டி, கரை படிந்த துணி ஆகியவற்றை அஞ்சலி வீட்டில் இருந்து காவல் துறையினர் கைப்பற்றி இருக்கின்றனர். இந்த இரட்டை கொலையில் அஞ்சலியை தவிர மற்றொரு நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகமடைந்த காவல் துறையினர் அஞ்சலியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.