ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பரவிய காட்டுத் தீயின் புகை

Photo of author

By Parthipan K

அமெரிக்காவின் மேற்குக் கரை மாநிலங்களில் பற்றி எரியும் காட்டுத் தீயின் புகை ஐரோப்பிய நாடுகளைச் சென்றடைந்துள்ளது. புகை பரவுவதை துணைக்கோளத் தகவல்களைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை கண்காணிப்பு நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா, வாஷிங்டன், ஆரெகன் ஆகிய மாநிலங்களில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவியிருப்பதால் புகையின் அளவு அதிகரித்துள்ளது. அது சுமார் 8,000 கிலோ மீட்டர் தாண்டி ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நாடுகளை அடைந்துள்ளது.