காரைக்கால் மீனவர்களை அடித்து தும்சம் செய்த இலங்கை கடற்படையினர்!!பொருட்களை அபகரித்து அட்டுழியம்?..

Photo of author

By Parthipan K

காரைக்கால் மீனவர்களை அடித்து தும்சம் செய்த இலங்கை கடற்படையினர்!!பொருட்களை அபகரித்து அட்டுழியம்?..

Parthipan K

The Sri Lankan Navy beat up the fishermen at Karaikal!!

காரைக்கால் மீனவர்களை அடித்து தும்சம் செய்த இலங்கை கடற்படையினர்!!பொருட்களை அபகரித்து அட்டுழியம்?..

புதுவை மாநிலம் காரைக்கால்மேடு  மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தான் ராஜ்குமார்.இவரின் தலைமையில்  சுமார் 15மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிக்க கடந்த 2 ஆம் தேதி காரைக்கால் கடற்கரை மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்களை பிடிக்க சென்றனர்.இந்நிலையில் கோடியக்கரை அருகே நடுக்கடலில் நேற்று வழக்கம் போல் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடிரென்று அங்கு ரோந்து பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத நேரத்தில் வலைப்போட்டு பிடித்த பெரிய அளவிலான மீன்களை எல்லாம் கொடுக்குமாறு மிரட்டியதாக தெரிகின்றது.அதற்கு காரைக்கால் மீனவர்கள் மீன்களை எல்லாம் தர முடியாது என மறுத்து பேசியிருக்கிறார்கள்.

இதனால்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  மேலும் 3 இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் வைத்திருந்த மீன்கள்,கம்பு,அரிசி,மளிகை,ஜி.பி.எஸ் கருவி உள்ளிட்ட பல பொருட்களை அபகரித்தும் சென்றனர். அதுமட்டுமல்லாமல் அவர்களின் படகுகளை அடித்து நாசமாக்கி சென்றுள்ளனர்.

மேலும் காரைக்கால் மீனவர்களை உடனே இந்த இடத்தை விட்டு செல்லும் மாறும் இல்லையென்றால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.படகில் இருந்த சில இலங்கை கடற்படை மீனவர்களை தாக்கியதாகவும் அதனால் மீனவர்கள் பலத்த காயம் அடைந்ததால் விரைவில் கரை திரும்பினர்.

பின் காயன் அடைந்த மீனவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் காரைக்கால் மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.தொடர்ந்து இலங்கை கடற்படை அட்டூயம் செய்து வருவதால் தமிழக கடற்படையினர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.