தமிழகத்தில் கூடும் பாஜகவின் பலம்- திணறும் அதிமுக கட்சி!
கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க கட்சி பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திதனர்.
ஆனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியுடன் அதிமுக கட்சி கூட்டணி சேராது என அதன் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
தற்போது அதிமுக கட்சியே இரண்டு பிரிவாக பிரிந்து எடப்பாடி தலைமையில் ஒரு அணியும் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் பிரிந்தனர்.
எனவே தமிழகத்தில் எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக தங்களது செல்வாக்கை இழந்து வருகிறது எனலாம், உடன் பயணித்த பல கட்சிகள் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது, அதுமட்டுமல்லாமல் அதிமுகவில் துணை பொதுசெயலாளர்களராக இருந்த பன்னீர்செல்வம் கூட பாஜக கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது அதிமுகவின் நிலையில்லா தலைமையை உணர்த்துகிறது.
கடந்த தேர்தலில் அதிமுகவுடன் பயணித்த தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நீதி கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகம் உள்ளிட்ட சிறிய கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. தேமுதிக கட்சியாவது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் தோல்வியில் முடிந்தது.
அதிமுகவின் இந்த நிலையை பார்க்கும் பொழுது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஏதேனும் ஒரு கட்சியாவது அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா அல்லது தனித்துதான் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழும்பியுள்ளது.
அதிமுக கட்சியின் இந்த நிலையை பார்க்கும் பொழுது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக குறைந்தபட்ச வாக்குகளையாவது பெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
பேசாமல் கடந்த தேர்தலைப் போன்று இந்த முறையும் பாஜகவுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்தித்தால் குறைந்தபட்ச வாக்கையாவது பெறும் என்று அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.