Breaking News, Crime, District News

அரசுப் பேருந்தில் தவறி விழுந்த மாணவன் பலி! போக்குவரத்துக் காவல்துறையினர் விசாரணை!

Photo of author

By CineDesk

அரசுப் பேருந்தில் தவறி விழுந்த மாணவன் பலி! போக்குவரத்துக் காவல்துறையினர் விசாரணை!

மதுரை பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 14). இவர் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பிரிட்டோ அரசு உதவி பெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று மாணவர் பிரபாகரன் பள்ளிக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது ஆரப்பாளையம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது  படியின் அருகில் பயணம் செய்த மாணவர் திடீரென தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

அப்போது  இதைப் பார்த்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தை நிறுத்தி மாணவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால்  சிகிச்சையில் இருந்த அவர் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! அனைவருக்கும் உதவித்தொகை வழங்கும் திட்டம்!   

என்னது? கல்யாணம் முடிஞ்சு போச்சா!!மணமகன் கோலத்தில் விஜய் டிவி பிரபலம்!!

Leave a Comment