இந்தியாவிலே மிகவும் மோசமாக செயல்படுவது தமிழக தகவல் ஆணையம் தான் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!!  

Photo of author

By Rupa

இந்தியாவிலே மிகவும் மோசமாக செயல்படுவது தமிழக தகவல் ஆணையம் தான் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!!

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் பலர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் தற்பொழுது அதற்கு இணையாக ஆட்களை நியமிக்காமல் குறைந்தபட்ச ஊழியர்கள் நியமித்தல் என்பது போதுமானதல்ல எனவும், தமிழ்நாடு தகவல் ஆணையம் முற்றிலுமாக சீரமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி பாமக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையரும், 6 தகவல் ஆணையர்களில் நால்வரும் ஓய்வு பெற்று விட்டதால், ஆணையம் கிட்டத்தட்ட செயலிழந்து விட்டது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி செய்யப்படும் மேல்முறையீடுகள் பல ஆண்டுகளாக விசாரிக்கப்படவில்லை

https://twitter.com/draramadoss/status/1620306378953994240

அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான மிக முக்கிய கருவி தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆகும். அந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கான அமைப்பு செயல்படாமல் இருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் அந்த சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கமே வீணாகி விட்டது

https://twitter.com/draramadoss/status/1620306381940346880

இந்தியாவிலேயே மிகவும் மோசமாக செயல்படும் தகவல் ஆணையம் தமிழ்நாடு தகவல் ஆணையம் தான். இந்த ஆணையத்தில் செய்யப்படும் இரண்டாம் நிலை மேல்முறையீடுகளில் வெறும் 14% மட்டுமே விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படுகின்றன. மீதமுள்ளவை கிடப்பில் போடப்படுகின்றன

https://twitter.com/draramadoss/status/1620306386268852224

தமிழ்நாடு தகவல் ஆணையம் முற்றிலுமாக சீரமைக்கப்பட வேண்டும். அதற்காக ஜனநாயகத்திலும், வெளிப்படைத்தன்மையிலும் நம்பிக்கை கொண்டவர்களை தலைமைத் தகவல் ஆணையராகவும், தகவல் ஆணையர்களாகவும் உடனடியாக நியமிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்

https://twitter.com/draramadoss/status/1620306391268474881

தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு ஓர் தலைமை ஆணையர், 9 ஆணையர்கள் என 10 பேரை நியமிக்க முடியும். ஆனால், இப்போது மொத்தம் 7 பேர் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். இது போதுமானதல்ல என்பதால், ஆணையர்களின் எண்ணிக்கையை பத்தாக உயர்த்த வேண்டும்

https://twitter.com/draramadoss/status/1620306394892361730

தற்போதுள்ள தகவல் ஆணையம் முறையாக செயல்படாததால் பல வழக்குகள் தற்போது வரவு தீர்ப்பளிக்காமல் நிலுவையில் உள்ளது.எனவே முறையாக ஊழியர்களி நியமித்து தமிழ்நாடு தகவல் ஆணையத்தை வலுப்பெற செய்ய வேண்டும் என பாமக தலைவர் அனுப்புமணி ராமதாஸ் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.