ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!..

Photo of author

By Parthipan K

ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!..

Parthipan K

The teenager fell down after being hit by a train in the blink of an eye because of his desire for reels!! Viral video!..

ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!..

தெலுங்கான மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் தான் அக்ஷய்ராஜ்.இவருடைய வயது 17.இவர் அதே பகுதியில்  பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க நினைப்பவர்.இவர் அவ்வப்போது பல வீடியோக்களை எடுத்து இணைய தளங்களில் பதிவிடுவார்.

அவர் எடுக்கும் ரீல்ஸ் அனைத்துமே ஆபத்தான இடங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.அந்த வகையில் நேற்று ஓடும் ரயில் முன்பாக ஒரு ரீல்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளார்.அதன்படி வேகமாக செல்லும்  ரயிலை உரசியபடி சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது அந்த ரயில் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் தலையில் மீது மோதியது.

இந்த விபத்தில் அவர் நிலைகுலைந்து சுருண்டு கீழே விழுந்தார்.இந்த விபத்தால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.பின் அருகில் இருந்த ரயிவே காவலர் ஒருவர் இதனை கவனித்து அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைக்கப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காயம் மோசமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக உயர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.பின் அவரின் உடல் ஆபத்தான கட்டத்தை தாண்டியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேலும் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு முகம் மற்றும் உடம்பில் சில காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்கள்.ரயில் அவரின் மீது மோதும் வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.