வடகொரியாவை பற்றி அதிர்ச்சி தகவல் கூறிய இளம்பெண்

Photo of author

By Parthipan K

வடகொரியாவை பற்றி அதிர்ச்சி தகவல் கூறிய இளம்பெண்

Parthipan K

வடகொரியாவில் வசிக்கும் அப்பாவி மக்களின் நிலையையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் வடகொரியாவில் பிறந்த யியோன்மி பார்க். வடகொரியாவில் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் பெருவாரியான மக்கள் சத்தான உணவுக்காக பூச்சிகளையே சாப்பிட்டு வருவதாக கூறும் பார்க், வடகொரியாவில் இருந்து தமது 13-வது வயதில் வெளியேறும் வரை தாமும் பூச்சிகளை சாப்பிட்டதாக கூறுகிறார். பொதுவாக சேரிப்பகுதிகள் போன்றே வடகொரிய தெருக்கள் காணப்படுவதாக கூறும் பார்க், தெருக்களில் கேட்பாரற்று சடலங்கள் கிடப்பதையும் தாம் அந்த சிறு வயதில் காண நேர்ந்ததை நினைவு கூர்ந்துள்ளார்.
பார்க் தமது தாயாருடன் கடந்த 2007 ஆம் ஆண்டு வடகொரியாவில் இருந்து சீனர் ஒருவரை நம்பி வெளியேறியுள்ளனர். ஆனால் அந்த நபர் சீனாவுக்கு அழைத்துச் சென்று தாயாரையும் 13 வயது சிறுமியையும் இன்னொரு சீன கும்பலுக்கு விற்றுள்ளார். அந்த கும்பல் பார்க்கின் தாயாரை பாலியல் தொழிலுக்கு தள்ளியுள்ளது. ஒருவழியாக அங்கிருந்து தப்பி மங்கோலியா சென்று, கோபி பாலைவனத்தைக் கடந்து, தென் கொரியாவில் பார்க்கின் சகோதரியுடன் இணைந்துள்ளனர். தொடர்ந்து 2014-ல் பார்க் அமெரிக்காவில் குடிபெயர்ந்து தற்போது நியூயார்க் நகரில் வசித்து வருகிறார்.