நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்த சோகம்

Photo of author

By Parthipan K

நேபாளத்தில் சிந்துபல்சவுக் மாவட்டத்தின் ஜுஹல் ரூரல் என்ற பகுதியில் உள்ள மலைத்தொடரில் லிடி  என்ற கிராமம் உள்ளது அங்கு 170-க்கும் அதிகமான குடும்பங்கள் இருகின்றனர். திடிரென குடியிருப்பு பகுதிகள் அமைந்திருந்த மலைத்தொடர் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்தன.

இதனால் பலர் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன ஆனாலும் 21 பேரின் நிலை என்ன என்பது தெரியாததால் அவர்களை தேடும் பணியில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.