பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்!!
சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பி.ஜி.அவென்யூ,நான்காவது தெருவில் சந்திரசேகரன் மற்றும் தனலட்சுமி என்னும் தம்பதி வசித்து வருகிறார்கள்.
இவர்களது மகள் மீனா (23)தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.இவர்களின் வீட்டில் மேல்தளத்தில் கட்டுமான பணி நடந்து வருகின்றது.
இந்நிலையில் நேற்றிரவு மீனாவின் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டனர்.மீனாவின் தாயார் கட்டுமான வேலைக்கு பணியாட்கள் வந்துள்ளார்களா என்பது குறித்து கேட்பதற்காக மீனாவின் செல்போன் நம்பருக்கு போன் செய்துள்ளார். ஆனால் மீனா வெகுநேரமாகியும் கால் அட்டென்ட் பண்ணவில்லை.
இதனால் பதற்றமடைந்த மினாவின் தாயார் அக்கம்பக்கத்தில் இருந்தவரை பார்க்க சொல்லிருக்கின்றார்.
வீட்டின் இரும்பு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்த நிலையில் மரக் கதவு திறந்து இருந்தது.வீட்டின் உள்ளே சென்று அக்கம்பக்கத்தினர், மீனா கத்திரிக்கோலால் கழுத்தில் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மீனாவின் பெற்றோருக்கும் காவல்துறைக்கும் அக்கம்பக்கத்தினர் புகாரளிக்கவே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி காவல் துறையினர், கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த மீனாவின் உடலை மீட்டெடுத்து உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விசாரணை செய்ததில்,மீனா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகை மற்றும் அவருடைய செல்போன் காணாமல் போனது தெரியவந்தது.இதுமட்டுமின்றி அன்று காலையில் கட்டிட வேலைக்கு வந்த நம்பர் வேறு ஒருவரை அழைத்து வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் அதன் பிறகு, அவருடைய செல்போன் நம்பருக்கு அழைக்கும் பொழுது,அவருடைய செல்போன் எண்ணும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அந்த நபரும் தலைமறைவாகியுள்ளார்.
இதனால் காவல்துறையினருக்கு அந்தக் கட்டுமான பணியாளர் மீது சந்தேகம் திரும்பியுள்ளது.
கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து பூந்தமல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.பட்டப்பகலில் 23 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தப்பட்டு கொலை செய்து,நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.