ஊரடங்கால் சிறுமிக்கு நடந்த அவலம்….

Photo of author

By Anand

புனே : நாடே ஊரடங்கு உத்தரவால் முடங்கி கிடக்க அத்தை மகனால் 16 வயதுடைய சிறுமி பலமுறை கற்பழிக்கப்பட்டு கற்பமடைந்த அவலம் தெரியவந்துள்ளது.

சிறுமி கற்பமடைந்ததை மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பிறகு சிறுமியின் அம்மாவால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

புனே போலிஸ் இதைப்பற்றி தெரிவிக்கையில், ” ஒரே வீட்டில் அந்த குடும்பம் தங்கியிருந்தது. முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும்முன் அந்த சிறுமியின் அத்தை மகன் (35 வயது), அவரது மனைவி மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி தவிர மற்ற குடும்ப உறுப்பினர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அந்த சிறுமி அவருடைய தேர்வுக்காக சொந்த ஊருக்கு செல்லவில்லை.

இதனை தொடர்ந்து சிறுமியின் அத்தை மகனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே நடந்த சண்டையால் அவரது மனைவி தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட, சிறுமி மட்டும் அவரது அத்தை மகனுடன் தங்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழலை பயன்படுத்தி சிறுமியின் அத்தை மகன் தவறாக நடந்துகொண்டிருக்கிறார்.
சிறுமியின் பெற்றோர் வந்து அழைத்து செல்வதற்கு முன் அவர் பலமுறை கற்பழிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

போஸ்கோ சட்டத்தின் கீழ் அந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.