Breaking News, Crime, National

ஜீப் மீது வேகமாக வந்து மோதிய லாரி! ! 6 பேர் உயிரிழந்த பரிதாபம்!! 

Photo of author

By Amutha

ஜீப் மீது வேகமாக வந்து மோதிய லாரி! ! 6 பேர் உயிரிழந்த பரிதாபம்!! 

ஜீப் மீது லாரி வந்து மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சோகமான இந்த விபத்து மராட்டிய மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

மராட்டியத்தில் உள்ள  தானே மாவட்டத்தில் கத்வாலி கிராமம் அருகே உள்ள பிவண்டி நாசிக் சாலையில் இன்று காலை 6.30 மணியளவில் ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில்  எதிர்திசையில் வேகமாக ஒரு ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி  திடீரென ஜீப் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதன்பின்னர், இந்த விபத்தில் அந்த ஜீப்பானது 100 மீட்டர் தூரத்திற்கு  வாரியார் இழுத்து செல்லப்பட்டது.

இந்த கோர சம்பவத்தில், சின்மயி விகாஷ் ஷிண்டே (வயது 15), ரியா கிஷோர் பர்தேஷி, சைதலி சுஷாந்த் பிம்பில் (வயது 27), சந்தோஷ் ஆனந்த் ஜாதவ் (வயது 50), வசந்த் தர்ம ஜாதவ் (வயது 50), பிரஜ்வால் சங்கர் பிர்கே என 6 பேர்பரிதாபமாக  உயிரிழந்து உள்ளனர்.

இந்த விபத்து நடந்த சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழந்த சூழலில், காயமடைந்த மற்றவர்களை அருகேயிருந்தவர்கள் மீட்டு கல்வா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட  காயமடைந்தவர்களில் திலிப் குமார் விஷ்வகர்மா (வயது 29), மற்றும் சேத்னா கணேஷ் (வயது 19), குணால் தியானேஷ்வர் பாம்ரே (வயது 22) ஆகியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிதாக களமிறக்கப்பட்ட vivo வின் நிறம் மாறும் வெர்ஷன்!! உடனடியாக முந்துங்கள்!!

வெற்றிகரமாக இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3 திட்டம்!!