மதுரை மீனாட்சி அம்மன் கோவில்! என்னது அது மீனாட்சியே இல்லையா? உண்மை சம்பவம் உள்ளே!

0
428
#image_title

மதுரையில் குழுவிருக்கும் மீனாட்சி அம்மனின் கோவில் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த அம்மனின் அருளால் பல பேர் இன்று வாழ்ந்து வருகின்றோம் என்று சொல்லலாம். ஆனால் அது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலே அல்ல. அந்த அம்மனுக்கு மீனாட்சி என்ற பெயரை இல்லை என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த கல்வெட்டுகளில் மீனாட்சி என்ற பெயரை பொறிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

நமது மதுரை மீனாட்சி அம்மனின் கதை சுருக்கம்: பல நூற்றாண்டுகளுக்கு முன் பார்வதி தேதியின் அம்சத்தில் ஒரு குழந்தை 3 மார்பகத்தோடு பிறக்கின்றது. அனைவரும் அந்த குழந்தையை பார்வதி தேவி என்றே நினைத்து வந்தனர். அந்தப் பெண்ணின் விதிப்படி எப்பொழுது சுந்தரேஸ்வரர் அதாவது சிவனைப் பார்க்கின்றாரோ அப்பொழுது மூன்றாவது மார்பகம் மறைந்து திருமணம் ஏற்படும் என்பது ஐதீகம். எப்படி அந்தப் பெண் வளர்ந்து வீர தீரத்தில் திளைத்து மதுரையின் எல்லைகளை பெரிதாக்கி அனைத்தையும் வெல்கிறார்.

 

இப்பொழுது கைலாசத்திற்கு செல்கிறார். கைலாசத்தின் தெய்வமான சிவ பிராணை பார்க்கிறார். அப்பொழுதே காதல் வயப்பட்ட மூன்றாவது மார்பகம் மறைந்து இருவரின் திருக்கல்யாணம் மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்று பெயரிட்டு கோலாகலமாக நடைபெற்று அங்கேயே இருவரும் தம்பதிகளாக இருக்கின்றனர் இதுதான் நமது மதுரை மீனாட்சி அம்மனின் கதை சுருக்கம்.

 

ஆனால் கல்வெட்டுகளில் மீனாட்சி என்ற பெயரில் எதுவும் இடம் பெறவில்லை.

 

கிட்டத்தட்ட சேர சோழ பாண்டியர் ஆட்சி காலத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்த கோயிலின் பெயர் “திருஆலவாய் உடைய நாயனார்” கோயில் இன்றே அழைக்கப்பட்டுள்ளது. இது சிவபெருமானை முக்கிய தெய்வமாகக் கொண்டு வழிபட்ட ஸ்தலமாகும்.

 

கிபி ஏழாம் நூற்றாண்டில் இந்த ஸ்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தர் ஆலவாய் இறைவன் ஆலவாய்க் சொக்கன் ஆலவாய் நாயனார் என்று சிவனைப் பற்றி தான் போற்றி உள்ளாரே தவிர மீனாட்சி என்ற சொல் எங்குமே இடம் பெறவில்லை.

 

இந்த கோவிலில் கிடைத்த மிகவும் பழம் பெருமையான கல்வெட்டுகள் யாவது என்றால் முதலாம் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் கல்வெட்டு. கிட்டத்தட்ட 900 வருடங்களுக்கு பழமையானது .இந்த கல்வெட்டில் இந்த அம்மனுடைய பெயர் திருகாமகோட்டம் உடைய ஆளுடை நாச்சியார். மேலும் அங்கயர் கன்னி என்ற பெயரும் அம்மனுக்கு இருந்துள்ளது. எனவே மீனாட்சி அம்மன் என்ற பெயர் எங்கேயும் பொறிக்கப்படவில்லை ஆனால் எப்படி இந்த பெயர் வந்தது.

 

1752 ஆம் ஆண்டு ஒரு விளக்கில் தான் மீனாட்சி அம்மன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதை தவிர வேறு எங்கும் எந்த கல்வெட்டுகளிலும் மீனாட்சி என்ற பெயர் இல்லை. கடந்த 200 வருடங்களாக மீனாட்சி அம்மன் என்ற பெயர் வைத்த வணங்கி இருக்கிறோம். ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வேறு பெயரே.

Previous articleBIG NEWS: 31 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.. மொத்தம் 45 பேர்.. நாடாளுமன்றத்தில் என்ன தான் நடக்கிறது..?
Next articleசொத்தைப்பல்லா?மஞ்சள் பற்களா? கவலை வேண்டாம்! இயற்கை பல்பொடி!