BIG NEWS: 31 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.. மொத்தம் 45 பேர்.. நாடாளுமன்றத்தில் என்ன தான் நடக்கிறது..?

0
243
#image_title

BIG NEWS: 31 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.. மொத்தம் 45 பேர்.. நாடாளுமன்றத்தில் என்ன தான் நடக்கிறது..?

டெல்லியில் புதிதாக கட்டுப்பட்டு இருக்கும் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி அன்று சிலர் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து கலர் குண்டு வீசி தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதை சற்றும் எதிர்பாராத எம்.பிக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதனால் நாடாளுமன்ற கட்டிடம் முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

கலர் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை நாடாளுமன்ற காவலர்கள் கைது செய்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையில் மத்திய அரசு குறைபாடு காட்டி இருக்கிறது என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற அவையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேர் அவை விதி மீறல் செயலில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது 31 எம்.பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சி.என்.அண்ணாதுரை, தமிழச்சி தங்கபாண்டியன், செல்வம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட 31 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதால் நாடாளுமன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

அவை விதி மீறலில் ஈடுபட்ட இந்த 31 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்வதற்காக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரே நாளில் இத்தனை எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.