அமெரிக்கா, கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்காக செய்த அதன் முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது. தடுப்பு மருந்தை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டும் Moderna நிறுவனத்துக்கு அமெரிக்க அரசாங்கம் சுமார் ஒரு பில்லியன் டாலர் வரை வழங்குகிறது. இறுதிகட்ட பரிசோதனைகளைத் தொடங்கவிருக்கும் Moderna நிறுவனத்துக்கு இதற்குமுன் 483 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது. தற்போது அதற்கும் மேல் 472 மில்லியன் டாலரை வழங்கவிருப்பதாக அமெரிக்க அரசாங்கம் குறிப்பிட்டது.
மூன்றாம் கட்ட பரிசோதனைகளை சுமார் 30 ஆயிரம் பேரிடம் நடத்தவிருக்கும் Moderna நிறுவனம், அரசாங்கத்தின் முதலீடு தேவையான ஒன்று எனத் தெரிவித்தது. Moderna நிறுவனத்தின் தொடக்கக் கட்ட சோதனை சிறிய அளவில் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற 45 பேரின் உடலிலும் நிறுவனம் தயாரித்த தடுப்பு மருந்து, கொரோனா கிருமிக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியது.