திரையரங்குகளுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட எச்சரிக்கை! கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உடனடி நடவடிக்கை!

0
305
The warning issued by the High Court to the theaters! Immediate action if extra charges are charged!
The warning issued by the High Court to the theaters! Immediate action if extra charges are charged!

திரையரங்குகளுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட எச்சரிக்கை! கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உடனடி நடவடிக்கை!

கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பண்டிகை தினங்களில் சிங்கம்3, பைரவா போன்ற படங்கள் வெளியானது.அப்போது திரையரங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும் இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் தெரிவித்தேன் ஆனால் அவர்கள் அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்த வழக்கு நீதிபதி அனுதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக புகார் வந்தது. அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது உரிய  கட்டணத்தை விட 100 ரூபாய் அதிகம் வசூல் செய்யப்பட்டது அதற்காக சமந்தப்பட்ட திரையரங்குகள் மீது தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாகவும், கூடுதல் கட்டணம் வசூல் செய்த புகாரின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி அந்த வழக்கை முடித்து வைத்தார். அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டுள்ளது. அதுபோன்ற நடவடிக்கையை தான் தொடர்ந்து எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா என்பதனை தொடரந்து கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous articleபிளஸ் டூ மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பிப்ரவரி 25 ஆம் தேதி நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும்!
Next articleஅரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி இந்த தகுதி இல்லையென்றால் ரேஷன் அட்டை கிடையாது!