நீதிமன்ற வாசலிலேயே மனைவிக்கு கத்திக்குத்து! கணவரின் கொலை வெறி தாக்குதல்!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் தான் சைத்ரா மற்றும் சிவகுமார். இவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஐந்தாண்டுகள் சுமூகமான முறையில் திருமண வாழ்க்கை நடைபெற்ற இருந்த வேலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்து வேறுபாடாகவே இருந்து வந்துள்ளது. இவரது கணவர் சிவகுமாரோ கோபம் தாங்க முடியாமல் சைத்ராவை அடித்தும் துன்புறுத்தியும் வந்துள்ளார்.
பொறுக்க முடியாத சைத்ரா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியது அவரது கணவர் சிவகுமாருக்கு அறவே பிடிக்கவில்லை.இருவரையும் அமர வைத்து வழக்கறிஞர் ஆலோசனை செய்தார்.பிறகு அவரது மனைவி ஆலோசனை முடிந்து வெளியேறும் வேளையில் அவரது கணவர் நீதிமன்ற வளாகத்திலேயே அவரது மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார்.
மேலும் அவர் மனைவியுடன் இருந்த மகனையும் குத்துவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் அவரது கணவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரது மனைவி சைத்ராவை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
வெட்டு காயம் கழுத்தில் ஆழமாக பதிந்ததால் நரம்புகள் அதிகளவு பாதித்துள்ளது. அதனால் ரத்தப்போக்கும் பெருமளவு ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை அளிக்கப்படும் சைத்ராவை காப்பாற்ற முடியவில்லை. அவரது கணவர் சிவகுமார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவரோடு சேர்ந்து வாழும் எண்ணத்தில் நீதிமன்றத்தை நாடிய மனைவிக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.