கோவை மாவட்டத்தில் அரங்கேறிய நிகழ்வு! பத்தாயிரம் நாணயத்தால் அனைவரையும் தன் வீட்டிற்கு வரவழைத்த முதியவர்!

0
118
The event staged in Coimbatore district! The old man invited everyone to his house with ten thousand coins!
The event staged in Coimbatore district! The old man invited everyone to his house with ten thousand coins!

கோவை மாவட்டத்தில் அரங்கேறிய நிகழ்வு! பத்தாயிரம் நாணயத்தால் அனைவரையும் தன் வீட்டிற்கு வரவழைத்த முதியவர்!

பொள்ளாச்சி பல்லடம் ரோடு ரத்தின சபாபதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் 85. இவர் காகித கவர் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும் இந்த பெரியவர் கடந்த 60 வருடத்திற்கும் மேலாக அரிய வகை ரூபாய் நோட்டுகள், பழங்கால நாணயங்கள் போன்றவற்றை சேகரித்து வைத்து வருகிறார். மேலும் அதில் ஒரு பைசா ,பத்து பைசா ,25 பைசா, மன்னர்கள் காலத்தில் நாணயங்கள் என மொத்தம் 10 ஆயிரம் நாணயங்கள் வரை சேகரித்து வைத்துள்ளார்.

மேலும் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை  ஒட்டி பொதுமக்கள், மாணவர்களிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் இந்த பெரியவர் பழைய நாணயங்களை கொண்டு வாழ்த்து மடல் ஒன்று தயாரித்துள்ளார். அந்த வாழ்த்து மடலில் நாட்டுப்பற்றை அனைவரிடமும் கொண்டு செல்வதற்காக தனது தள்ளாடும் வயதிலும் இவர் மேற்கொள்ள முயற்சிகள் மிகவும் மக்கள் மத்தியில் பாராட்டத்திற்குரியதாக மாறி உள்ளது.

மேலும் இதுகுறித்து வெங்கடாசலம் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது  சிறு வயது முதலே பழங்கால  நாணயங்கள் மற்றும்  நோட்டுகளை சேகரித்து வருவது வழக்கம். இந்நிலையில் நமது நாட்டின் 75 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். மேலும் இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வரைபடத்துடன் வெளிவந்த 300 நாணயங்களை கொண்டு வாழ்த்து மடல் தயாரித்ததும் தெரியவந்தது. மேலும் அந்த முதியவர் தயாரித்த வாழ்த்து மடலை அக்கம் பக்கத்தினர்  மற்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பார்வையிட்டு செல்வதோடு அவரை பாராட்டி வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Parthipan K