கணவரை அழைத்துச் செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

0
159

கணவரை அழைத்துச் செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

காஞ்சிபுரம் அருகே கணவர் மனைவி இருவரும் வாழ்ந்து வந்தனர். கணவர் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருக்கும் பொழுது அவரை அழைத்து வருவதற்கு மனைவி தனது இருசக்கர வாகனத்தில்  பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் அருகே ரோட்டில் ஒரு சிறிய பள்ளம் இருந்தது. பின் அந்தப் பள்ளத்தை தாண்டுகுவதற்காக மெதுவாக வந்து கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி ஒரு லாரி ஆனது வந்துகொண்டிருந்தது.

அந்த பெண் அந்த லாரியை கவனிக்காமல் சென்றதால் அந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியது.அப்போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறியாது. பின் அவர் கீழே விழுந்தார். இந்த லாரியின் பின்பக்க சக்கரம் அந்த பெண்ணின் மீது ஏறி இறங்கியது.

சம்பவ இடத்திலேயே அந்த பெண் பரிதாபமாக  உயிரிழந்தார்.இரவு நேரம்  என்பதால் அக்கம்பக்கத்தினர் அதிகம் எவரும் காணப்படவில்லை. ஒரு சிலர் மட்டுமே இருந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்  பேரில் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கு குறித்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை பார்த்து யார் மீது  தவறு உள்ளது என்பதை அறிந்தனர்.மேலும்  போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஆதார் எண்ணை இணைக்காவிட்டால் இரு மடங்கு அபராதம்! வருமான வரித்துறை எச்சரிக்கை!!
Next articleபள்ளிகளில் இனி இது மாணவர்களுக்கு கட்டாயம்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு