முகநூல் காரணமாக குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க ஓடோடி வந்த பெண்! ஆனால் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்!

0
174

முகநூல் காரணமாக  குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க ஓடோடி வந்த பெண்! ஆனால் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்!

ராமநாதபுரத்தில் முகநூல் மூலம் ஏற்பட்ட காதலால், காதலனை பார்க்க சென்ற பெண் அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவறையில் தூக்கில் தொங்கி உள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டம் கணேச புரத்தைச் சேர்ந்தவர் ரங்கன். 35 வயதான இவர் பத்து வருடங்களுக்கு முன்பு மினி பேருந்தில் ஓட்டுனராக இருந்தார். இவர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

இவருக்கு வயது 29. இவர்களுக்கு 8 மற்றும் 6 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது ரங்கன் கொத்தனார் வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் முகநூல் உபயோகிக்க ஆரம்பித்தார் ஐஸ்வர்யா. அதன் மூலம் ராமநாதபுரம் உத்தரகோசமங்கை மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்ற நபர் அறிமுகமாகி உள்ளார். இவருக்கு வயது 31 ஆகும்.

இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். அந்த நட்பு நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. ஆனால் அவரிடம் ஐஸ்வர்யா தனக்கு திருமணம் ஆனதை பற்றியோ, குழந்தைகள் இருப்பதை பற்றியோ அவரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அதன் காரணமாக விஜய் தனக்கு பெற்றோர் யாரும் இல்லை. எனவே நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதன் காரணமாக ஐஸ்வர்யாவும், ராமநாதபுரம் கிளம்பி வந்துவிட்டார்.

அங்கே வழிவிடு முருகன் கோவிலில் வைத்து பதிவு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யலாம் என்று பேசப்பட்டது. விஜய்யின் உறவினர் வீட்டில் தான் ஐஸ்வர்யா தங்கியிருந்தார். அப்போது பதிவு திருமணத்திற்காக அவரது ஆதார் கார்டை வாங்கியுள்ளனர். அதில் கணவர் பெயர் என்று இருந்ததை பார்த்து அதிர்ந்து என்னவென்று விசாரித்த போது தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும், ஆனால் எனக்கு தற்போது கணவருடன் வாழ பிடிக்கவில்லை என்றும், மேலும் அது பற்றி எதுவும் பேச வேண்டாம் என்றும் ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன விஜய் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு, அவரது கணவருக்கும் தகவல் தெரிவித்து விட்டார். மேலும் அந்த பெண் கணவருடன் செல்ல மறுத்து விட்டதன் காரணமாக அவருக்கு மன நல ஆலோசனை கொடுப்பதற்காக நேற்று முன்தினம் இரவு போலீசார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அந்த பெண் தனது துப்பட்டாவில் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதல் ஆசையினால் குழந்தைகளை தவிக்கவிட்டு, கணவரை விட்டு இந்த பெண் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Previous articleநிதி நெருக்கடியில் அம்மா உணவகம், நிறுத்தப்படுகிறதா உணவுகள்?
Next articleஇன்று தமிழக ஆளுநரை சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.!!