நிதி நெருக்கடியில் அம்மா உணவகம், நிறுத்தப்படுகிறதா உணவுகள்?

0
95
Chapathi sale stopped in amma unavagam

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்டது தான் அம்மா உணவகம். இது ஏழைகளுக்கு அட்சய பாத்திரமாக இருக்கிறது.

காலை வேளைகளில் இட்லி, பொங்கல் 5 ரூபாய்க்கும், மதிய வேளைகளில் கலவை சாதங்கள் 5 ரூபாய்க்கும், இரவு வேளைகளில் சப்பாத்தி 3 ரூபாய்க்கும் விநியோகிக்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கின் போது மக்களுக்கு அம்மா உணவகம் ஒரு மிகப்பெரிய அட்சயபாத்திரமாக இருந்தது. வேலை இல்லா மக்கள் குறைந்த செலவில் 3 வேலை உணவு சாப்பிட்டு வந்தனர். சாலையோரங்களில் வசிப்போருக்கு அம்மா உணவகம் பேருதவியாக இருந்து வருகிறது.

அம்மா உணவகங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 300 வீதமாக மாதம் 9000 சம்பளம் கொடுக்கப்படுகிறது.

உணவுகளும் மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு கொடுக்கப்படுகின்றன. இதனால் சென்னை மாநகராட்சிக்கு 300 கோடி ருபாய் இழப்பு ஏற்படுகிறது.

தற்போது இரவு நேரங்களில் கொடுக்கப்படும் சப்பாத்தி நிறுத்தப்பட்டு இருக்கிறது. சப்பாத்திக்கு தேவையான கோதுமை விநியோகம் இல்லாததால் சப்பாத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சப்பாத்திக்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் இப்போது இரவு நேரங்களில் தக்காளி சாதம் மட்டுமே வழங்கப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

author avatar
Parthipan K