பஸ் டிரைவரை அலறவிட்ட பெண்மணி! சாலையை கடக்கும் போது நடந்த விபரீதம்
சேலம் மாவட்டம் ஓமலூர் செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இவருடைய மனைவி ஜமுனா.இவர்களுக்கு வீராசாமி என்ற மகன் உள்ளார்.இந்நிலையில் கோவிந்தராஜ் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதினால் அவருக்கு அரசு உதவித்தொகை வழங்கும்.அந்த உதவியை பெறவேண்டும் என்றால் அதற்கு முறையாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் .
அதனால் கோவிந்தராஜ், ஜமுனா மற்றும் வீராசாமி ஆகிய மூவரும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துவிட்டு வீடு திரும்பினார்கள்.அப்போது அவர்கள் அங்கிருந்து சாலையை கடக்க முயன்றனர்.அந்நிலையில் தனியார் பேருந்து ஒன்று அதிக வேகத்தில் அவர்கள் மூவரையும் இடிப்பது போல வந்தது.அதன் பிறகு ஓட்டுநர் வாகனத்தை வேகமாக அவர்களின் அருகில் சென்று நிறுத்தியுள்ளார்.அதில் மூவரும் பயந்து நடுங்கி உள்ளனர்.
அதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த ஜமுனா அந்த பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.உடல் நலம் பாதிக்கப்பட்ட நபருடன் சாலையை கடக்கும் பொழுது இவ்வாறு செய்வது சரியா என கோபம் அடைந்த ஜமுனா பேருந்து ஓட்டுநரை தகாத வார்த்தையால் திட்டி அந்த பேருந்தை எட்டி உதைத்துள்ளார்.
அந்த வாக்குவாதத்தினால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மேலும் இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜமுனாவை சமாதானம் செய்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்தார்.குறிப்பாக போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை சமாதானம் செய்தார்களே தவிர பேருந்து ஓட்டுனரை கண்டிக்க வில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தினால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவி காணப்பட்டது.