Skip to content
News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • Cinema
  • Sports
Breaking News

பருப்பு கம்பெனியில் கையாடல் செய்த பெண்கள்!! கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பேர் செய்த பலே வேலை!! 

Published On: 19 ஜூலை 2023, 3:48 மணி | By Amutha
The women who handled the dal company!! Bale work done by three people including a pregnant woman!!

பருப்பு கம்பெனியில் கையாடல் செய்த பெண்கள்!! கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பேர் செய்த பலே வேலை!! 

சென்னை திருவொற்றியூர், டோல்கேட் பகுதியில் ராஜேஷ் பிரதர்ஸ் என்ற பெயரில் பருப்பு கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கம்பெனியில் கடந்த 10 வருடங்களாக  சரண்யா வயது 32, பிரதீபா வயது 36, மற்றும் திவ்யா ஆகிய 3 பெண்களும் சேர்ந்து கணக்கு வழக்கு பார்த்துள்ளனர். இந்த சூழ்நிலையில் அந்த மூன்று பெண் ஊழியர்களும் சேர்ந்து கம்பெனியின் பணத்தை கையாடல் செய்து விட்டதாக தெரியவந்தது. சுமார் ரூ.2½ கோடி அளவுக்கு பணத்தை அவர்கள் மூன்று பேரும் சுருட்டி விட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு  சென்னை மத்திய குற்றப்பிரிவின் ஆவண மோசடி தடுப்பு பிரிவிற்கு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.  இதன் அடிப்படையில் கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி, துணை கமிஷனர் மீனா, உதவி கமிஷனர் ராஜசேகரன் ஆகியோர் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த மூன்று பெண்களும் சேர்ந்து சுமார் 2.30 கோடி சுருட்டியது தெரியவந்தது. இதன் காரணமாக ஊழியர்கள் சரண்யா, பிரதீபா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். திவ்யா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால், அவர் கைது செய்யபடவில்லை. ஆனால் அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட 3 பேரின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் ரூ.27½ லட்சம் ரொக்கப்பணம், 197 பவுன் தங்க நகைகள், ரூ.67 லட்சம் வங்கி வைப்புத்தொகை, ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள், 6 செல்பொன்கள் போன்றவை கைப்பற்றப்பட்டு மீட்கப்பட்டது.  

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

© 2025 News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports • Built with GeneratePress