ஐரோப்பாவில் கிருமித்தொற்று தீவிரமடைந்து வருவதாக, உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோக ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், உத்தேச நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் நாள்கள் குறைக்கப்பட்டுவருவது குறித்தும் நிறுவனம் கவலை தெரிவித்தது. இந்த மாதம் ஐரோப்பில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நோய்ப்பரவல் சம்பவங்கள், உலகமக்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை மணி என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குநர் கூறினார்.
உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி, நோய்த்தொற்று உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்து 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் பிரான்ஸில் அது 7 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலும் அயர்லந்திலும் அது இப்போது 10 நாள்கள். இன்னும் சில நாடுகள் அதேபோல, தனிமைப்படுத்தப்படும் நாள்களைக் குறைக்கத் திட்டமிடுகின்றன.