வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென  நேர்ந்த விபரீதம்!! 

0
145

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென  நேர்ந்த விபரீதம்!! 

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண் பாம்பு கடித்ததில் பலியானார்.

திருவள்ளுவர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு என அழைக்கப்படும் சிறுவாபுரி ஒன்றியம் மேட்டுதெருவில் வசித்து வருபவர் வாசுதேவன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் பார்கவி வயது 23. இவர் நர்சிங் படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பார்கவி சாப்பிட்டுவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் உள்ளே நுழைந்த விஷ பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. வலி தாங்காமல் அலறிய அவரை குடும்பத்தினர் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக இளம் பெண் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பார்கவியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இளம்பெண்ணின் தந்தை வாசுதேவன் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து வாசுதேவனின் புகாரை பெற்றுக் கொண்ட சப் -இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உறங்கிக் கொண்டிருந்தபோது இளம் பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleகுடும்ப அரசியல் என விமர்சனம் செய்த மோடி!! நெத்தியடி பதில் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!! 
Next articleஉயிரைப் பறிக்கும் பாத்திரங்கள் எது தெரியுமா!! இனி இதில் சமைத்து சாப்பிடாதீர்கள் ஆபத்து!!