டீ வைக்க சென்ற இளம்பெண்!!! தீ பிடித்து உடல் கருகி பலியான சோகம்!!!
சேலம் மாவட்டத்தில் டீ வைக்கும் பொழுது பட்டதாரி இளம்பெண் ஒருவருக்கு தீ பிடித்ததில் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கோபாலனூர் கருவறையான் காட்டை சேர்த்த சீனிவாசன் அவர்கள் விவசாயம் செய்து வருகின்றார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 27 வயதான பிரபு என்ற மகனும், 23 வயதான என்ற மகளும் உள்ளனர். வனிதா அவர்கள் பிகாம் பட்டப்படிப்பை முடித்துள்ளார். வீட்டிற்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.
இந்நிலையில் நேற்று(அக்டோபர்25) வீட்டில் யாரும் இல்லாத பொழுது டீ வைக்க வீட்டின் சமையலறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது திடீரென்று வனிதா அவர்கள் சத்தம் போட்டுள்ளார். வனிதாவின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் பெற்றவர்கள் ஓடி வந்து பார்த்த பொழுது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
வனிதா உடல் முழுவதும் தீ பற்றி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் சங்ககிரி காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த தீயணைப்பு துறையினர். மற்றும் காவல் துறையினர் சமையலறையில் பற்றி எரிந்த தீயை அனைத்து உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய வானத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனையில் வானத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே வனிதா இறந்துவிட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.