நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்:! பதறவைக்கும் காரணம்!!

Photo of author

By Pavithra

நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு
நேர்ந்த கொடூரம்:! பதறவைக்கும் காரணம்!!

காதலிக்க மறுத்த பெண்ணை நடுரோட்டில் வைத்து வெட்டிய சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரிலுள்ள தேஷ்பாண்டி பகுதியைச் சேர்ந்த ஆஷா என்னும் இளம்பெண் இஸ்மாயில் என்னும் இளைஞருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.இவர்கள் இருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இஸ்மாயிலிடம் பேசுவதை ஆஷா நிறுத்திவிட்டார்.

இதனால் ஆஷாவின் மீது மிகுந்த கோபத்தில் இருந்த இஸ்மாயில், ஆசா அப்பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது,தன்னிடம் பேசும்படியும்,பழகும்படியும் இஸ்மாயில் கூறியுள்ளார்.
இதனை மறுத்த ஆஷாவை இஸ்மாயில் கொடூரமாக கத்தியால் குத்தியுள்ளார்.ஆஷா தன்னை காப்பாற்றுமாறு கத்தி கூச்சலிடவே,சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் இஸ்மாயில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

ஆஷாவை மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.மேலும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது இஸ்மாயில் ஆஷாவை
குத்திய காட்சி சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி காட்சியின் அடிப்படையில்,இஸ்மாயிலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு ஆஷா நலமாக உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.