கேரள மாநிலம் காசர்கோடு அருகே அரிங்கல் கிராமத்தைச் சேர்ந்த பென்னி – பெஸ்ஸி தம்பதியினருக்கு மூத்த மகன் ஆல்பில் ,ஒரு பெண் ஆன் மேரி (16) வசித்து வந்தனர் . மகன் ஆல்பின் (22) என்பவர் ஐ.டி.ஐ படிப்பினை முடித்து விட்டு வீட்டிலேயே இருந்தார். வீட்டிலேயே இருப்பதனால் அவரது பெற்றோரும் சகோதரியும் அந்த இளைஞனை திட்டி உள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அனைவரையும் கொல்ல திட்டமிட்டார்.கடந்த மாதம் சமைத்து வைத்த உணவில் எலி மருந்தை கலந்து அனைவரையும் கொல்ல முயன்றார்.அப்பொழுது மருந்தின் வீரியம் அளவு குறைந்து இல்லாததால் அனைவரும் வயிற்று வலியுடன் உயிர் தப்பினர்.
இந்நிலையில் சில நாட்கள் முன்பு அவரது தங்கை ஆன் மேரி வீட்டிலேயே ஐஸ்கிரீம் தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார்.அதனைக் கண்ட இளைஞன் ஆல்பின் ஐஸ்கிரீமிலில் எலி மருந்தினை கலந்து வைத்துள்ளார்.ஏதும் அறியாத தங்கை ஆன் மேரி மற்றும் இளைஞரின் தந்தை அந்த கேக்கினை உண்டு அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.தீவிர சிகிச்சை அளித்தும் இளைஞனின் தங்கையை ஆன்மேரியை காப்பாற்ற இயலவில்லை.இளைஞனின் தந்தை தற்பொழுது வரை தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் மரணத்தில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் சிறுமியின் உடலை உடற்கூறு ஆய்விற்கு பரிந்துரைக்கும் படிகேட்டுக் கொண்டனர்.அப்பொழுது அச்சிறுமியில் உணவில் எலி மருந்து கலந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ,சொத்துக்காக ஆசைப்பட்டு வீட்டில் உள்ளவர்களை கொலை செய்ய முயன்றதாக அந்த இளைஞன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.