ஜாதி வெறியால் தன் அக்காவை கொலை செய்த தம்பி.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

ஜாதி வெறியால் தன் அக்காவை கொலை செய்த தம்பி.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.

ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும் ராஜேஷ் சஞ்சய் 22 என்ற வாலிபரும்  நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இளம்பெண்ணின் உறவினர்கள் ராஜேஷை சந்தித்து அவ்வப்போது மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் இதையெல்லாம் பொருட்படுத்தாத இந்த காதல் ஜோடிகள் நேற்று முன்தினம் காரில் அமர்ந்து ஆள் அரவமற்ற பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர்.

இதைக் கண்ட அங்குள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் இது குறித்து அந்தப் பெண்ணின் 17 வயது தம்பி இடம் கூறியுள்ளார்கள். உடனே தனது நண்பர்கள் நாலு பேரை அழைத்துக் கொண்டு அங்கு சென்றார். பிறகு அங்கு அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ராஜேஷை சுட்டுக் கொன்றார். மேலும் தனது அக்காவையும் விடாது அந்த கூட்டம். அப்பெண் அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் நேரடியாக அருகில் உள்ள காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். எனவே போலீசார் இது குறித்து தொடர்பான விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது

Leave a Comment