நீங்கள் லேப்டாப் வாங்கப் போகிறீர்களா! கவனிக்க வேண்டிய ஐந்து விஷயம்!

0
104

நீங்கள் லேப்டாப் வாங்கப் போகிறீர்களா! கவனிக்க வேண்டிய ஐந்து விஷயம்!

முதலில் பட்ஜெட்:எப்பொழுது எந்த பொருட்களை வாங்கினாலும் அதற்கான பட்ஜெட்டை முதலில் சிந்தித்து செயல்படுவது மிகவும் சிறந்தது அந்த வகையில் லேப்டாப் வாங்குவதற்கு முன், பட்ஜெட்டை நிர்ணயிப்பது மிகவும் முக்கியம். லேப்டாப்களை ஆராய்ந்த பின் அதன் விலை உங்கள் பட்ஜெட்டுக்கு ஒத்து வருகிறதா என்பதனை உறுதி செய்வது அவசியமான ஒன்று ஆகும்.

இரண்டாவதாக பிராசசர் மற்றும் ரேம்:லேப்டாப்-ல் உள்ள பிராசசர் அதன் திறனை கூறுகிறது. மேலும் ரேம் தடையில்லா வேகமான பணியை உறுதி செய்கிறது. பெரும்பாலான மடிக்கணினிகள் இன்டெல் அல்லது ஏ எம் டி சி பி யு உடன் வருகின்றது. ஆனால், பெரிய அளவில் இன்டெல் செயலி மூலம் இயங்கும் மடிக்கணினியை அதிகம் தேர்வு செய்யப்படுகிறது. இன்டெல்லின் கோர் ஐ 3 பொதுவாகத் தொடக்க நிலை லேப்டாப்-ல் காணப்படுகிறது, அதேசமயம் கோர் i5 பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

மூன்றாவதாக சைஸ்:பெரும்பாலான லேப்டாப்கள் 15.6-இன்ச் திரையுடன் வருகின்றன. ஆனால், சிறிய 14-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் அமைப்புகள் நிறைய உள்ளன. உங்கள் பணிக்கு நிறையப் பயணம் செய்ய வேண்டியிருந்தால், சிறிய வடிவ காரணியை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் அது பொதுவாக இலகுவானது மற்றும் உங்கள் பையில் வைப்பது எளிதாக இருக்கும். பெரிய மடிக்கணினிகள் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றது. ஒரே இடத்தில் வைத்துப் பயன்படுத்துவதாக இருந்தால் பெரிய திரை கொண்ட லேப்டாப்-யை தேர்வு செய்யலாம்.

நான்காவது ஸ்டோரேஜ்:அதிக சேமிப்பு சிறந்தது. 500ஜிபி மற்றும் 1டிபி ஹார்ட் டிஸ்க் டிரைவ் (எச்டிடி) கொண்ட லேப்டாப்கள் இன்று மிகவும் பொதுவானவை. இருப்பினும், எஸ் டி டி வேகமானதாக உள்ளது. ஆனால், பெரும்பாலும் குறைவான சேமிப்பகத்துடன் வருகிறது. எனவே, லேப்டாப் வாங்கும் போது உங்கள் தேவைக்கேற்ப சேமிப்பகத்தைக் கருத்தில் கொள்ள மறக்காதீர்கள்.

இறுதியில் லேப்டாப்பின் பேட்டரி:

ஒரு நல்ல பேட்டரி இல்லாமல், உங்கள் லேப்டாப் உங்களுக்குத் திருப்தியைக் கொடுக்காது என்றே கூறலாம். உங்கள் லேப்டாப் குறைந்தபட்சம் 4-6 மணிநேர பேட்டரி ஆயுளைக் கொடுக்க வேண்டும். எட்டு மணிநேர பேட்டரி மிக நன்மை எனவும் கூறப்படுகிறது.

 

author avatar
Parthipan K