விஜய் பட நடிகையின் செருப்பை திருடிய இளைஞர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்!!

0
177
#image_title

விஜய் பட நடிகையின் செருப்பை திருடிய இளைஞர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்!!

மாஸ்டர் திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்த நடிகையின் வீட்டில் செருப்பு திருடு போனதாக புகார் வந்துள்ளது.

விஜய்-ன் மாஸ்டர் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி –ன் வீட்ல விசேஷம் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை சங்கீதா. இவர் தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாகவும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

சென்னையில் உள்ள கேகே நகர் பகுதியில் பிடி ராஜன் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜூன் 9 தேதி அன்று வீட்டிற்கு வெளியே இருந்த காலணிகள் முதலிய பொருட்கள் திருடு போனதாக தகவல் வெளிவந்துள்ளது.

அவருடைய வீட்டின் வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தப் போது அந்த வழியே வந்த இரண்டு இளைஞர்கள் செருப்பை திருடி சென்றதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஒரு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்து முதலில் சங்கீதா வின் வீட்டை நோட்டம் விட்டு விட்டு பிறகு திருடி சென்றதாக சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது.

இச்சம்பவம் குறித்து நடிகை சங்கீதா கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் மக்களை எச்சரிக்கை படுத்தும் வகையில் சிசிடிவி பதிவுகளை சமூக ஊடங்களில் பதிவிட்டு விழிப்புணர்வும் கூறி உள்ளார்.

திருடி சென்றவர்கள் வேறு எதுவும் கிடைக்காமல் இதை எடுத்து சென்றதாக கூறி உள்ளார். வயதான தாய் மற்றும் தனது குழந்தையுடன் இருக்கும்  சங்கீதா தனது பாதுகாப்பிற்காக காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் என்றும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleதளபதி வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கிய பிரபலம் !! அடேங்கப்பா இவ்வளவு விலையிலா?
Next articleலிப்ட் கேட்டு செல்லும் பெண்களே உஷார்!! லிப்டினால்  இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீத கொடுமையான சம்பவம்!