சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை

0
219

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் காந்திபுரம் டாக்டர் தோட்டத்தில் ஓய்வுபெற்ற அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் இளங்கோ(70) தபெ கந்தசாமி வசித்து வருகிறார். இன்று 12.8.2021ஆம் தேதி விடியற்காலை 05.00 மணி அளவில் அவர் தனது மனைவி ராஜசுலோச்சனாவுடன்(61) (Ret principal ராணிமேரி கல்லூரி) மருத்துவ சிகிச்சைக்காக கோயம்புத்தூர் குப்புசாமி மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

சிகிச்சை முடிந்து இன்று மாலை சுமார் 06.00 மணியளவில் திரும்ப தனதுவீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 20 பவுன் நகை ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் ஒன்பது பட்டுப்புடவைகள் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றதுள்ளனர்.

இதுகுறித்து ஆத்தூர் டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகர் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோப்பநாய் வரவழைத்து கொள்ளையர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரியின் முதல்வர் வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து ஆத்தூர் ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஆபாச வீடியோ வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய ஐகோர்ட்! பிராமண பத்திரம் தாக்கல்!
Next articleவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி! 217 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்!