நெல்லை மாவட்டத்தில் ஒர்க்ஷாப்பில் திருட்டு! போலீசார் விசாரணை!

0
213
Theft in the workshop in Nellie district! Police investigation!
Theft in the workshop in Nellie district! Police investigation!

நெல்லை மாவட்டத்தில் ஒர்க்ஷாப்பில் திருட்டு! போலீசார் விசாரணை!

நெல்லை மாவட்டம் பேட்டை ரகுமான் பேட்டை இரண்டாவது வடக்கு தெருவை சேர்ந்தவர் முகம்மதுஷாலி இவரது மகன் சேக் முகம்மது (35). இவர் பேட்டையில் சேரன்மாதேவி சாலையில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி ஒர்க்ஷாப்பில் வைத்து இருந்த ரூம் 3 ஆயிரம் மதிப்பிலான ஜாக்கி திருட்டு போனது.

மேலும்  இது குறித்து பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் போலீசார் விசாரணையில் இந்த பகுதியில்பொருத்தியிருந்த  சிசிடிவி கேமரா பதிவில் சம்பவத்தன்று பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.

மேலும் அந்த வீடியோ பதிவில் ஷேக் முகம்மதுவின் ஒர்க்ஷாப்பிற்கு   வந்த நபர் செல்போனில் பேசியவாறு அங்கு இருந்த ஜாக்கியை திருடி சென்றது   தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணை நடத்திய முக்கூடல் அருகே உள்ள மேலபாப்பாக்குடி தேரடி தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன்(45) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஜாக்கியே போலீசார் பறிமுதல் செய்து ஷேக் முகம்மதுவிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleபைக் மீது லாரி மோதியதால் பறிபோன உயிர்.. தாயை இழந்த ஒரு மாத குழந்தை!.
Next articleகுட்டி ஐன்ஸ்டீன் சமூக வலைத்தளத்தை திரும்பி பார்க்க செய்யும் 8 மாதக் குழந்தை!!..