மோடியை வீழ்த்துவதே அவர்களின் நோக்கம்!! எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை விமர்சித்த பசவராஜ் பொம்மை!!
2024 ஆம் ஆண்டில் வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பாஜக -வை வலிமையோடு எதிர்க்கொள்வதற்காக அனைவரும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர்.
அதில், ஒரு அங்கமாக பீகார் மாநிலத்தின் முதலமைச்சரும் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் கட்சி தலைவருமான நிதீஷ் குமார் தலைமையில் சென்ற மாதம் ஜூன் 23 அன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்து முடிந்தது.இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பதினாறு கட்சிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மேதரும் தமிழகத்தின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் முதலியோர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து தற்போது இந்த எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டமானது இன்றும் நாளையும் பெங்களூரில் நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள 24 எதிர்க்கட்சிகளை அழைத்துள்ளனர்.
இவ்வாறு நடைபெறும் இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, இந்த எதிர்க்கட்சி கூட்டத்தை அவர்கள் “மகாத்பந்தன்” என்று அழைக்கின்றனர். ஆனால் இது உண்மையாகவே பந்தன் இல்லை என்றும்,
அவர்களின் நோக்கம் பிரதமர் மோடியை வீழ்த்துவது தான். ஆனால் அது முடியாது என்றும் கூறி உள்ளார். மேலும், பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியத்தை சேர்த்து பார்த்தாலும் அது பூஜ்ஜியம் தான் என்றும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.