திருப்பதியில் தரிசனம் கிடையாது!! பக்தர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!!
ஆந்திர மாநிலம் என்றாலே நம் அனைவருக்கும் தெரிந்தது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் மிகுந்தே காணப்படும்.
இந்த திருப்பதியில் உள்ள ஏழுமலையானை உலகின் பணக்காரக் கடவுள் என்று அழைப்பார்கள். இங்கு விடுமுறை நாட்கள் பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
தற்போது இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டமானது குவிய துவங்கியுள்ளது. இங்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய இம்மாநிலம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா கேரளா, மகாராஷ்டிரா போன்ற ஏராளமான பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
எனவே கோவிலுக்கு வரும் முன்னரே தரிசனத்திற்காக தேவஸ்தானம் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை 11 ஆம் தேதி அன்று தரிசனம் இல்லை என்று டிடிடி அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஜூலை 17 ஆம் தேதி அன்று ஆனிமாத ஆஸ்தானம் வரவிருக்கிறது. இதனால் ஜூலை 11 ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்க இருக்கிறது. இந்த திருமஞ்சனம் ஆறு மணிக்கு துவங்கி ஐந்து மணி நேரம் நடைபெறும் என்பதால் பக்தர்கள் அன்று பெருமாளை தரிசிக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த திருமஞ்சனம் நடந்து முடிந்த பிறகு மதியம் பன்னிரெண்டு மணிக்கு மேல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று டிடிடி அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த தகவல் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.