வெயில் கொப்பளம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!

Photo of author

By Rupa

வெயில் கொப்பளம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!

வெயில் காலங்களில் நம்மில் பலருக்கும் உடலில் கொப்புளங்கள், கட்டிகள் ஏற்படும். இதனை சரி செய்ய மருந்து மாத்திரைகள் எடுத்து கொண்டிருப்போம். இது தற்காலிக தீர்வை தந்திருக்கும். நிரந்தர தீர்வை தரும் எளிமையான வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

வெயில் காலம் வந்துவிட்டால் இந்த வேனல்கட்டிகள் அதாவது கொப்பளங்கள், கட்டிகள் ஏற்படுவது வழக்கம். இது நமக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த பிரச்சனை சரி செய்ய என்ன மருத்துவ முறைகளை பயன்படுத்த வேண்டும், வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

 

இந்த கட்டிகள் பொதுவாக சூடு அதிகம் உள்ள பகுதிகளில் ஏற்படும். அதிகம் தசை உள்ள பகுதாகளில் ஏற்படும். தொடைப் பகுதிகள், ஆசன வாய்க்கு அருகில் உள்ள பகுதிகள், கை கால்கள் போன்ற இடங்களில் வரும். இந்த கட்டிகள் எதனால் ஏற்படுகின்றது என்றால் ஸ்டபில்லோ காக்கஸ் என்ற பாக்டீரியா தாக்கத்தின் மூலமாக நம் உடல்களில் இந்த வெயில் கட்டிகள் ஏற்படுகின்றது. மேலும் நம் உடலில் பலம் இல்லாத செல்கள் எங்கு உள்ளதோ அங்கு இந்த கட்டிகள் ஏற்படும்.

 

ஒரு சிலருக்கு இந்த கட்டிகள் ஏற்பட்டு சில நாட்களில் உடைந்து பத்தது நாட்களுக்குள் சரியாகும். ஒரு சிலருக்கு இவ்வாறு குணமடைந்து மறுபடியும் தோன்றும். இவ்வாறு குணமடைந்து மீண்டும் தொடர்ந்து இந்த கட்டிகள் ஏற்படும். அவ்வாறு உள்ளவர்களுக்கு இந்த மருத்துவ முறை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

 

இந்த கட்டியை போக்கும் மருத்துவ முறை…

 

* இந்த வெயில் கட்டிகளை போக்குவதற்கு உள் மருந்தாக 20 மிலி அளவு அருகம்புல் சாறு தொடர்ந்து 14 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அருகம்புல் சாறு நம் இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள பாக்டீரியா கிருமிகளை அழிக்கும். மேலும் நம் உடலில் காயம் புண் ஏற்பட்டால் அதை வேகமாக ஆறுவதற்கு உதவி செய்யும்.

 

* வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் மஞ்சள் மூன்றையும் தேவையான அளவு எடுத்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த மருந்தை கட்டிகள் உள்ள இடங்களில் தேய்த்து அதன் மேல் சிறிய துணியை போர்த்தி வைத்தாலே போதும். இந்த மருத்துவ முறையை செய்யும் பொழுது சிலருக்கு இந்த கட்டிகள் அப்படியே மறைந்து விடும்.

 

ஒரு சிலருக்கு இந்த கட்டிகள் பழுத்து உடையும் அப்படி பழுத்து உடையும் பொழுது அந்த கட்டிகளில் இருந்து வரும் சீழ் மற்ற பகுதிகளில் பட்டு மேலும் கட்டிகள் வரும். அந்த சமயம் கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறும் பொழுது ஒரு துணி அல்லது பஞ்சை வைத்து துடைத்து கொள்ள வேண்டும். இந்த கட்டிகள் அதிகம்க இருக்கும் பொழுது அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.

 

இந்த கட்டிகள் உள்ளவர்கள் செய்யக் கூடாதவை…

 

* இந்த கட்டிகள் உள்ளவர்கள், சிகிச்சை பெறுபவர்கள் என அனைவரும் மாமிசம் உண்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

 

* புகைப்பழக்கம் இருப்பவர்கள் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

 

* அடிக்கடி வெயில் சென்று வருவதை தடுக்க வேண்டும்.

 

அடிக்கடி நீர்ச்சத்துக்கள் உள்ள காய் கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அடிக்கடி ஏற்படும் இந்த கட்டிகள் இரத்தத்தில் அதன் கிருமிகளை விட்டுச் செல்லும் இதனால் கோடைக்லங்களில் மட்டுமில்லாமல் குளிர் காலங்களிலும் இந்த கட்டிகள் ஏற்படும். எனவே வெயில் கட்டிகள் வந்தால் இது போன்ற இயற்கை மருத்துவ முறைகளை செய்துசரி செய்து கொள்ளுங்கள்.