தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது! அரசின் அதிரடி நடவடிக்கை!

Photo of author

By Rupa

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது! அரசின் அதிரடி நடவடிக்கை!

Rupa

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது! அரசின் அதிரடி நடவடிக்கை!

கொரோனா தொற்றானது சீன நாட்டில் தனது பிறப்பிடத்தை கொண்டிருந்தாலும் தற்பொழுது அனைத்து நாடுகளிலும் உலா வருகிறது.அந்தவகையில் அனைத்து நாடுகளும் முதல் மற்றும் இரண்டாம் அலையில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கும் பெருமளவு சிரமப்பட்டனர்.தற்போது அனைத்து நாடுகளும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையுடன் இருப்பதால் குறைந்த உயிர் சேதத்தை சந்திக்கிறது.

நாளடைவில் சற்று அதிகமாக தொற்று பரவல் காணப்பட்டால் உடனடியாக ஊரடங்கு போடப்படும் நிலையில் தான் நாம் அனைவரும் உள்ளோம்.அந்நிலைமையை தவிர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதிலும் குறிப்பாக அனைத்து நாட்டினரும் மக்களிடம் வலியுறுத்தி கூறி வருவது கொரோனா தடுப்பூசி செலுத்துவது தான்.ஆனால் நமது இந்தியாவில் ஓர் சில இடத்தில் மக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்த தயங்குகின்றனர்.தற்போது இரண்டாம் அலையில் அதிகளவு உயிர் சேதங்களை சந்தித்தால் மக்கள் தடுப்பூசி போட முன்வந்துள்ளனர்.

தடுப்பூசி போடாமல் இருப்பவர்களை தடுப்பூசி செலுத்த வைப்பதிலும்  மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை எடுத்து வருகிறது.அதில் குறிப்பாக கேரளாவில்,கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாதவர்களை வங்கிகள்,பொது இடங்கள் மற்றும் சந்தைகளுக்கு செல்ல தடை விதித்துள்ளனர்.மேலும் தடுப்பூசி போட்டால் மட்டுமே அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியும் என்றும் கூறியுள்ளனர்.அதேபோல தற்போது  பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களின் தொலைப்பேசியின் அழைப்பு துண்டிக்கப்படும் என கூறியுள்ளனர்.

மேலும் அலுவலகத்திற்கு வர தடை செய்துள்ளனர்.தடுப்பூசி செலுத்தாமல் யாரவது வேலை செய்தால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.மேலும் அந்நாட்டில் தடுப்பூசியானது போதுமான அளவில் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.தட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சம்பளம் கிடையாது,தொலைப்பேசியின் அழைப்புகள் துண்டிக்கப்படுதல் போன்றவற்றை அறிந்த மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விடியற்காலை முதலே முகாம்களின் வாசலில் நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர்.பலமணி நேரம் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டு செல்கின்றனர்.நாளடைவில் இதுபோல ஏதேனும் கட்டுப்பாடுகள் நமது இந்தியாவிற்கும் வர வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.