கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடா? கோரிக்கையை ஏற்குமா தமிழக அரசு!

0
103
Green house for handloom weavers? Will the Tamil Nadu government accept the request?
Green house for handloom weavers? Will the Tamil Nadu government accept the request?

கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடா? கோரிக்கையை ஏற்குமா தமிழக அரசு!

நமது நாட்டில் பல பாரம்பரியம் இன்றளவும் மாறாமல் இருந்து வருகிறது.அதில் ஒன்று தான் கைத்தறி நெசவு.முன்பு அனைவரும் இதை தான் உபயோகம் செய்து வந்தனர்,நாளடைவில் டிஜிட்டல் மாறுபாட்டிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.தற்போது கைத்தறி நெசவு முடங்கி வரும் சூலில் உள்ளது.ஏனென்றால் ஓர் புடவைக்கு ரூ.350 மட்டுமே கிடைக்கிறது என்றும் கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்தனர்.அதனால் அனைத்து தொழில்களும் முடங்கி கிடந்தது.

அதனால் நெசவு தொழில் அதிக பின்னடைவை சந்தித்தது.ஏனென்றால் கொரோனா தொற்றின் காரணமாக முழு ஊரடங்கை அரசாங்கம் அமல்படுத்தி இருந்தது.அதனால் ஜவுளி கடைகள் செயல்படாமல் அனைத்தும் மூடப்பட்டது.அதனால் நெசவு தொழில் மிகவும் பின்னோக்கி இருந்தது.தற்போது ஊரடங்கு தளர்வுகள் எற்படுத்திருந்தாலும் அவர்களது அன்றாட வாழ்வு இன்றளவும் சீராகவில்லை.மேலும் முன்பை விட ஓர் புடவையின் விலை குறைந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

அதனால் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.தங்களுக்கு தறி கூடாரத்துடன் பசுமை வீடு ஒன்று கட்டி தர வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி இலவச மின்சாரத்தை 500 யூனிட்டாக மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.இவர்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்குமா என்பதை நாம் அனைவரும் பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

தற்போது கொரோனா தொற்றை கடந்து வந்த போதிலும் இன்றளவும் பல தொழில்கள் அடிமட்டத்திலேயே இருக்கிறது.அவர்கள் மீண்டும் தொழிலில் முன்னேறி வர உதவிகளை நாடி இருக்கின்றனர்.அவ்வாறு உள்ள தொழில்களை அரசாங்கம் கண்டு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும்.மீண்டும் மூன்றாவது அலை தீவிரமடைவதற்குள் இவர்களில் தொழில்களுக்கு அரசாங்கம் ஏதேனும் வழி செய்ய வேண்டும்.அப்போதுதான் அவர்களின் தொழில்கள் மேலோங்கி காணப்படும்.