கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது!

Photo of author

By Divya

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது!

நாம் வாழ பணம் மிகவும் முக்கியம். பணத்திற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. இந்த பணத்தை வைத்து நிலம், வீடு, நகை வாங்கி சொகுசாக வாழ வேண்டும் என்பது பலரது கனவு. சிலருக்கு அவை விரைவில் நடந்து விடும். சிலருக்கு அவை நடப்பதில் தாமதம் ஏற்படும்.

மனிதர்களை இயக்கும் பணத்தின் வரவு அதிகரிக்க அதனை அதிகளவு சேமிக்க கல் உப்பு பரிகாரம் செய்து வாருங்கள்.

வாரத்தில் செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய 3 தினங்களில் மட்டுமே இந்த பரிகாரத்தை தொடங்க வேண்டும்.

இதற்கு முதலில் ஒரு மண் பானை சிறியளவில் வாங்கி வந்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யவும். பிறகு மண் பானைக்கு மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அதில் கல் உப்பு நிரப்பி பூஜை அறையில் வைக்கவும். பிறகு ஒரு துண்டு படிகாரத்தை கல் உப்பினுள் போட்டு மறைத்து வைக்கவும்.

மாதந்தோறும் அமாவாசை அன்று மண் பானையில் உள்ள கல் உப்பை நீரில் போட்டு கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விடவும்.

பிறகு மீண்டும் மண் பானையில் கல் உப்பு நிரப்பி படிகாரத்தை வைத்து விடவும். படிகாரத்தை மட்டும் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றினால் போதுமானது. இந்த பரிகாரம் செய்யத் தொடங்கிய உடன் பலனை கண்கூடாக பார்க்க முடியும்.