ஒரே ஒரு எலுமிச்சம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை பனிக்கட்டி போல் உருக்கிவிடும்!

0
44
#image_title

ஒரே ஒரு எலுமிச்சம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை பனிக்கட்டி போல் உருக்கிவிடும்!

உடல் எடை அதிகரித்து காணப்படுவது உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல உடல் அழகையும் கெடுத்துவிடும். இரத்த நாளங்களில் அதிகப்படியான கொழுப்புகள் படிவதால் மாரடைப்பு, உடல் பருமன் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகிறது.

எனவே இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சம் பழம் ஒன்று
2)பூண்டு நான்கு பற்கள்
3)தேன் ஒரு ஸ்பூன்

செய்முறை:-

ஒரு முழு எலுமிச்சம் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து நான்கு பல் பூண்டை தோல் நீக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும் எலுமிச்சம் பழ துண்டுகளை போட்டு நன்கு கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து விட்டு கொதிக்க வைத்த நீரை ஆற விடவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஆறவிட்ட எலுமிச்சம் பழம் + பூண்டு நீரை ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து குடித்தால் இரத்த நாளங்களில் படிந்து கிடந்த கொழுப்பு அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.