இந்த 2 பொருள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பணப் பிரச்சனையை காணாமல் போகச் செய்யும்!!

Photo of author

By Divya

இந்த 2 பொருள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பணப் பிரச்சனையை காணாமல் போகச் செய்யும்!!

எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அவை அனைத்தும் செலவிற்கே சென்று விடுகிறது. சேமிப்பு என்ற ஒன்றை செய்யவே முடியவில்லை என்று பலரும் வருந்துகின்றனர். வாங்குகின்ற சம்பள பணம் அனைத்தும் செலவிற்கே சென்று விட்டால் எப்படி சேமிப்பது என்று புலம்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்.

ஜாதிக்காய்
விரலி மஞ்சள்

இந்த இரண்டு பொருட்களுமே பணத்தை வசியம் செய்யக் கூடியவை. வீட்டு பூஜை அறையில் ஒரு பித்தளை தட்டில் 3 ஜாதிக்காய் மற்றும் 2 விரலி மஞ்சள் வைத்துக் கொள்ளவும். அதன் நடுவில் ஒரு விளக்கு வைக்கவும். காமாட்சி அம்மன் விளக்காக இருந்தால் இன்னும் சிறப்பு.

இந்த விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவும். பிறகு பணப் பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை நாள் அன்று செய்வது மிகவும் நல்லது. ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்து வந்தால் பணப் பிரச்சனை நீங்கி அதன் வரவு அதிகரிக்கும்.