உடல் எலும்பை இரும்பாக்க உதவும் பிரண்டை!! இதை இப்படி பயன்படுத்தி வாருங்கள்!

0
119
#image_title

உடல் எலும்பை இரும்பாக்க உதவும் பிரண்டை!! இதை இப்படி பயன்படுத்தி வாருங்கள்!

மருத்துவ குணம் நிறைந்த பிரண்டை உடலில் உள்ள எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது. இந்த பிரண்டையில் தோசை செய்து கொடுத்தால் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி உண்பார்கள்.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடலுக்கு தேவையான சத்துக்களை பிரண்டை வழங்குகிறது. இதை சிறு வயதில் இருந்தே சாப்பிட்டு வந்தால் முதுமை காலத்தில் ஏற்படக் கூடிய மூட்டு வலி, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பித்து விடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பிரண்டை
2)தோசை மாவு
3)நல்லெண்ணெய்

செய்முறை:-

ஒரு கப் பிரண்டையை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு கப் தோசை மாவில் இந்த பிரண்டை விழுதை போட்டு கலந்து கொள்ளவும்.

பிறகு அடுப்பு பற்ற வைத்து தோசைக்கல் வைக்கவும். இவை சூடானதும் பிரண்டை மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.

அடுத்து தோசை மீது தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். இந்த தோசைக்கு தேங்காய் சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும்.

பிரண்டை தோசையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம், எலும்பு தேய்மானம், மூட்டு வலி, முதுகு வலி அனைத்தும் குணமாகும்.