இந்த 3 பொருட்கள் போதும்!! ஓயாத கண் திருஷ்டியும் நொடியில் ஒழிந்து விடும்!!

Photo of author

By Rupa

இந்த 3 பொருட்கள் போதும்!! ஓயாத கண் திருஷ்டியும் நொடியில் ஒழிந்து விடும்!!

ஒரு வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருந்தால் அங்கு மனசஞ்சலங்கள் ஏற்படும்.குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலமின்றி போகும்.அது மட்டும் இன்றி தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படாமல் போகும்.

இதற்கு காரணமான எதிர்மறை ஆற்றலை தான் கண் திருஷ்டி என்று சொல்கிறோம்.இந்த பெயரை கேட்டால் பகைவன் கூட நடுங்குவான்.கண் திருஷ்டி நன்றாக வாழ்ந்த குடும்பம் வீழ்ந்த கதையெல்லாம் இருக்கிறது.

இந்த கண் திருஷ்டி நம் மீது பொறாமை குணம் கொண்டவராகளால் ஏற்படுகிறது.இதில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வாரத்தில் ஞாயிறு அன்று வீட்டில் ஒரு தூபம் போட வேண்டும்.

இந்த தூபம் போட தேவைப்படும் பொருட்கள் வெண் கடுகு,மருதாணி விதை மற்றும் மூலிகை சாம்பிராணி பொடி.

ஞாயிற்றுக் கிழமை தலைக்கு குளித்து விட்டு வீடு மற்றும் பூஜை அறையை துடைத்து விடவும்.பின்னர் பூஜை அறையில் உள்ள கடவுள் படங்களை அலங்கரிக்கவும்.

அதன் பின்னர் ஒரு ஸ்பூன் வெண்கடுகு,ஒரு ஸ்பூன் மருதாணி மற்றும் மூலிகை சாம்பிராணி பொடி கொண்டு தூபம் போடவும்.இந்த தூபத்தை வீட்டு முழுக்க காட்டவும்.இவ்வாறு செய்வதினால் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள்,கண் திருஷ்டி,தரித்திரம் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.வாரத்தில் முதல் நாளான ஞாயிறு அன்று இந்த தூபம் போட்டு வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.