பாதித்த நுரையீரல் புத்துணர்ச்சி பெற இந்த 3 பொருள் போதும்!

0
244

பாதித்த நுரையீரல் புத்துணர்ச்சி பெற இந்த 3 பொருள் போதும்!

எங்கு பார்த்தாலும் கொரோனா வின் கோரப்பிடியில் சிக்கி மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். நோயின் கோரப்பிடியில் ஒரு பக்கம். மருத்துவமனையில் படுக்கைகள் சிக்காமல் வழியிலேயே இறந்து போகும் மக்கள் ஒரு பக்கம்.

கொரோனா வின் இரண்டாவது அலையின் அறிகுறிகளாக சளி, இருமல் காய்ச்சல், மூச்சுத் திணறல் ஆகியவை சொல்லப்படுகின்றன. முக்கியமாகக் கொரோனா என்றாலே நுரையீரல் பாதிக்கப்பட்டு விடுகிறது என்று தான் முதலில் சொல்கிறார்கள்.

அந்த பாதித்த நுரையீரலை இயற்கையான முறையில் சுத்தம் செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.

அதற்குத் தேவையானது மூன்றே மூன்று பொருள்கள் மட்டும் தான். கொரோனோ நோய், இல்லை என்றாலும், இந்த இயற்கை முறையை தினமும் பயன்படுத்தி வரும் பொழுது நுரையீரல் மற்றும் சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் இன்றி நீங்கள் நலமுடன் வாழலாம்.

தேவையான பொருட்கள்:

1. அகத்திப்பூ 5

2. முள்ளங்கி சாறு 50 மில்லி

3. தண்ணீர் 250 மில்லி

செய்முறை:

1. மேலே கூறியவற்றை முதலில் சரியான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

2. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமாக சூடு படுத்தவும்.

3. அந்த தண்ணீருடன் அகத்தி பூ சேர்த்து பாதியாக வரும் வரை சுண்ட வைக்கவும்.

4. அடுப்பை அணைத்துவிட்டு இதனை வடிகட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

5. இதனுடன் 50 மில்லி முள்ளங்கி சாற்றை சேர்த்துக் கொள்ளவும்.

6. இந்த செய்முறையை 45 நாட்கள் தொடர்ந்து செய்து சாப்பிட்டு வர பாதித்த நுரையீரல் புத்துணர்ச்சி பெறும்.

7. இதை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அருந்தலாம்.

இந்த இயற்கையான முறையை பயன்படுத்தி உங்கள் நுரையீரலை சுத்தம் செய்யுங்கள்.

Previous articleமிகவும் அவசரம்! மோடிக்கு முக்கிய கடிதத்தை எழுதிய பிரபலம்!
Next articleதனுஷ் பட நடிகரை காவு வாங்கிய கொரோனா!